பிப்ரவரி 23 அன்று கார்த்திகை நட்சத்திரமும், சஷ்டி திதியும் ஒரு சேர வருகிறது அன்றைய தினம் இந்துக்கள் அனைவரும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்காக கந்தசஷ்டி பாராயணம் செய்ய வேண்டும்,
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” என ஆண்டாள் (திருப்பாவை) பாடியதுபோல நாம் அனைவரும் சேர்ந்து கந்த சஷ்டி பாராயணம் செய்தால், இந்து மக்களிடையே ஒற்றுமை மேலோங்கும், அனைவரும் கந்த சஷ்டி பாராயணம் செய்து அருள்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக சடகோப ராமானுஜ ஜீயர் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் வரும் 23-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய உள்ளனர்.