Share On
தமிழ்நாடு செய்திகள்

370 நீக்கப்பட்டு 7 ஆண்டுகள்: ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் வளர்ச்சிப் பயணம் தொடர்கிறது – பிரதமர் மோடி பாராட்டு

Admin 5 days ago
இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் ஆண்டாக இருப்பதால், இந்நாளுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கான அரசியலமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35(A) பிரிவுகள் நீக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்தப் பதிவில், 370 மற்றும் 35(A) பிரிவுகள் நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் விளையாட்டுத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களுக்கு இந்திய அரசியலமைப்பின் முழுமையான உரிமைகள் கிடைத்ததால் அவர்கள் அதிகாரமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் ஆண்டாக இருப்பதால், இந்நாளுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமைக்காக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வை, 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நனவானதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் முன்னேற்றத்திற்கும், ஒவ்வொரு குடிமகனும் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) உருவாக்கத்தில் பங்காற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement