Share On
தமிழ்நாடு செய்திகள்

உண்மை களமாட பிறந்தது மக்கள் களம்!

admin 5 months ago
ஊடக உலகில் பாரம்பரிய ஊடகங்களான அச்சு மற்றும் தொலைக்காட்சிக்கு மாற்றாக, இணைய ஊடகம் புதிய ஊடகமாக உருப்பெற்று வருகிறது. உடனடிப் பகிர்தல் மற்றும் டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியால் நவீன உலகின் வியப்புக்குரிய தளமாக இணைய ஊடகம் இன்று உருப்பெற்றுள்ளது.

ஊடக உலகில் பாரம்பரிய ஊடகங்களான அச்சு மற்றும் தொலைக்காட்சிக்கு மாற்றாக, இணைய ஊடகம் புதிய ஊடகமாக உருப்பெற்று வருகிறது. உடனடிப் பகிர்தல் மற்றும் டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியால் நவீன உலகின் வியப்புக்குரிய தளமாக இணைய ஊடகம் இன்று  உருப்பெற்றுள்ளது.

வான் மேகம் பொழிகின்ற நீர் தூயது. ஆனால், நிலத்தின் தன்மைக்கேற்ப, மண்ணின் நிறத்திற்கு ஏற்ப, பூமியில் விழுகின்ற வான் மேகம் பொழிகின்ற நீரின் நிறம் மாறுவது போல, டிஜிட்டல் ஊடகத்தின் செய்திகள் அதன் கையில் சிக்கியிருப்போரின் கைகளை பொறுத்து சில இடங்களில் நம்பகத்தன்மை  கேள்விக்குறியாகலாம்.  ஆனால், பொறுப்புணர்வோடு பகிரப்படும் உண்மைத் தகவல்கள், உடனடியாக அனைவரது கண்களுக்கும் சென்று சேர்ந்து பெரிதும் பயன்பெறக் கூடியதாக அமைந்துள்ளது.  

அழிவுக்குரிய வாசல்கள் விரிந்து இருந்தாலும், வாழ்வுக்குரிய குறுகிய பாதையை இனம் கண்டு, நல்ல மற்றும் புதிய தகவல்களை கொடுக்க வந்திருக்கிறோம் நாங்கள். 

ஜனநாயகத்தின் அடையாளமாக திகழக்கூடிய இந்திய திருநாட்டின் பெருமையை பறைசாற்றவும், தமிழ் மொழியின் அழகை பேசவும், மனித உரிமை மீறல்களுக்கு கடிவாளம் போடவும், அநீதிகளுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரலாகவும், அரசு மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகளை சாமானியனின் பார்வைக்கு தந்திடவும், பொது நலன் சார்ந்த விஷயங்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிக்கொண்டுவரவும், பல்வேறு தகவல்களைத் தேடி பெற்று பொதுமக்களுக்கு பகிரவும், அடிப்படை உரிமை, சுதந்திரம்  மற்றும் பொறுப்புணர்வோடு, டிஜிட்டல் ஊடக உலகில் பொதுமக்களின் கண்களாகச் செயல்பட இன்று ( 02.01.2026 ) முதல் உண்மை களமாட பிறக்கிறது, மக்கள் களம் ( www.makkalkalam.com )  இணைய செய்தி தளம்.

உங்களின் பேராதரவை பெற்று மகிழும்

செ.கார்த்திகேயன்
நிறுவனர் & செய்தி ஆசிரியர்

மக்கள் களம் இணைய செய்தி தளம்

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement