தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புதுப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினிமாகாளி, ஸ்ரீ சந்தனமாரியம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில்களின் வருஷாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நேற்று (5.2.26)நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களுடன், வருஷாபிஷேகத்தை பாலன் சர்மா சீரும் சிறப்புமாக நடத்தினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் நயினார் பிள்ளை, முத்தையா பிள்ளை, கணபதியா பிள்ளை, லெட்சுமணன் ஆசாரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா, மகாராஜா, ஹரி, சிவா, முத்து, ஜெகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், ஏராளமான , பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.
வருஷாபிஷேத்தை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று விழா சிறப்பாகவும், பக்தி முழக்கத்துடனும் நிறைவடைந்தது.