திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம், துலுக்கனூர், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்த கீதாஜீவன், திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது பேசிய கீதாஜீவன், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தவெக ஆட்சியில் கடந்த நான்கு மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். பொதுமக்கள் நிம்மதியில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இடைத்தேர்தல் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், “எல்லோருக்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் எந்தப் பகுதியையும் புறக்கணிக்காமல், ஒவ்வொரு தொகுதியின் தேவைகளையும் அறிந்து மக்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அண்ணா, கலைஞர் வழியில் 78 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் திமுகவை விமர்சிப்பதற்கு தவெக ஆட்சியாளர்களுக்கு தகுதியில்லை என்றும் கீதாஜீவன் தெரிவித்தார். தமிழகத்தில் சூழ்ந்துள்ள இருளை அகற்றி விடியலை ஏற்படுத்த இந்த தொகுதியில் உதயசூரியன் உதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பும்போது முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்காமல் அமைச்சர்கள் மூலம் பதிலளிப்பதாக விமர்சித்த கீதாஜீவன், தமிழகத்தில் நடைபெறுவதாக கூறப்படும் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் தங்களது வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்தில் கருணாநிதி எம்.எல்.ஏ திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஓன்றிய செயலாளர் முருகேசன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளா் அன்பழகன், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, இலக்கிய அணி துணை அமைப்பாளா் பால்ராஜ், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், கதிரேசன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட தாராபுரம் தொகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.