Advertisement

Share On
தமிழ்நாடு செய்திகள்

“வீ த லீடர்ஸ்” விரைவில் அரசியல் கட்சியாக மாறும்! – மதுரையில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Admin 2 weeks ago

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். ஜி. ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழக முதல்வர் லண்டன் சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு பதிலாக கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து, தொழிலை விரிவுபடுத்த அரசு சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

தொழில் வளர்ச்சிக்காக அரசு 50 சதவீதம் மானியம் வழங்கும் என உறுதியளித்தாலே தொழில் மேம்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இந்தியா உருவெடுக்கும்.
முதலமைச்சர் லண்டன் சென்றது தேவையற்றது.

மேலும், நாம் ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை எடுப்போம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பச்சை டோக்கன் வைத்திருப்பவர்கள் ஒரு புறமும், சிவப்பு டோக்கன் வைத்திருப்பவர்கள் மற்றொரு புறமும் அமர வேண்டும் என்ற நிலை இருந்தது. சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பது போன்ற சூழல் காணப்பட்டது. மாட வீதிகள் வி.ஐ.பி.க்களின் வாகன காப்பகமாக இருந்தன.

ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே நமது குரல்.

நமது இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் தலைவர்கள்தான். இதுதான் உண்மையான புரட்சி. ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக எம்.எல்.ஏ. ஒருவர் பேசிய விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். மேலும், பெண்களின் பாதுகாப்பு குறித்து விரைவில் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் சார்பில் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement