Share On
மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் !!

Admin 1 day ago தூத்துக்குடி
தொழிலாளர்களுக்கு காப்பீடு, நலவாரியச் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை: சங்க நிர்வாகிகள் உறுதி
தூத்துக்குடி:ஆக 9
தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மடத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் செ.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.எஸ்.தங்கம், பொருளாளர் சரவணன், துணைத் தலைவர் செண்பகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.


சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் தலைவர் எஸ்.முத்துராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். மதுரை சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றினார்.


மாவட்டத் தலைவர் செ.கண்ணன் பேசுகையில், தன்னை மாவட்டத் தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், “நான் மட்டும் தலைவர் இல்லை; இங்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும் தலைவர்கள்தான். அனைவரும் ஒற்றுமையுடன், முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு சங்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

மாநில நிர்வாகிகள் பேசுகையில், சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கவும், தொழிலாளர் நல வாரியத்தில் அனைவரையும் விரைவில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் தொழிலாளர்களின் நலன் தொடர்பாக 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி திண்டிவனம், மதுரை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்டப் பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்

மேலும் செய்திகள்

"அமைச்சரை காணோம்" அதிருப்தியில் தூத்துக்குடி தொகுதி மக்கள்; அடிப்படை பிரச்சனையில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு!!

16 minutes ago

தூத்துக்குடிக்கு குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது,ஆற்றுக்குள் இறங்கி ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

1 day ago

ஆதிக்க சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

1 day ago

சினிமாவில் நடித்த விஜய், தற்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார்” – தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

2 days ago

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

3 days ago

“திமுக சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; தவெக ரீல்ஸ் ஆட்சியின் வேதனைகளையும் எடுத்துரைக்க வேண்டும்” – கீதாஜீவன் பேச்சு

3 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement