Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

மகளிர் வெற்றிப்பயணம் எதிரொலி: தூத்துக்குடியில் அரசு - தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்!

Admin 3 days ago தூத்துக்குடி
மகளிர் வெற்றிப்பயணம் திட்டம் எதிரொலியாக தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டமான 'வெற்றிப் பயணம்' விரிவுபடுத்தப்படுவதால் தனியார் பேருந்துத் துறைக்கு பெரும் வருவாய் இழப்பும், தொழில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்வதால், தனியார் பேருந்துகளில் பெண்களின் பயணம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஆனால் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. பயணிகள் அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டுவதால் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளை மறித்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்

“போதை இல்லாத தலைமுறையை உருவாக்குவோம்” – தூத்துக்குடியில் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அழைப்பு

7 hours ago

மீளவிட்டானில் 9 நாள் போராட்டம் வெற்றி! புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படாது – மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் சப் கலெக்டர் உறுதி!

1 day ago

காந்தி ஜெயந்தியில் அதிரடி சோதனை: தூத்துக்குடியில் 38 பேர் கைது – 1,495 மதுபாட்டில்கள் பறிமுதல்

4 days ago

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம்: தூத்துக்குடியில் திமுக சார்பில் மரியாதை

4 days ago

மகளிர் இலவசப் பேருந்து பயணம் விரிவாக்கம்: எவ்வளவு தூரம் பயணிக்கலாம்? — முழு விவரம்!

5 days ago

தூத்துக்குடி மாநகராட்சியில் LR காப்பி வழங்குவதில் விதிமீறலா? கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய பாஜக வலியுறுத்தல்!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement