காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளுக்கு முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத், இ.கா.ப., உத்தரவின்பேரில், அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதுவரை நடைபெற்ற நடவடிக்கையில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 1,495 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காந்தி ஜெயந்தி முழு மதுவிலக்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வோர் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.