Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

“போதை இல்லாத தலைமுறையை உருவாக்குவோம்” – தூத்துக்குடியில் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அழைப்பு

Admin 1 day ago தூத்துக்குடி
தூத்துக்குடி:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, “போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்” என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

முதற்கட்டமாக தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றார். அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

தொடர்ந்து தெற்கு காட்டன் சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற அவர், அங்குள்ள குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாடினார். குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இதையடுத்து திருச்செந்தூர் சாலையில் உள்ள காமராஜர் கல்லூரிக்கு சென்ற வேலூர் இப்ராஹிம், மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பது மற்றும் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் சந்திக்கும் சிவன் கோவில் தேரடி பகுதியில் “போதையில்லா பாரதத்தை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்றார்.

நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், மசானம், சிவராமன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் இணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றன.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி! தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் திரண்ட நிர்வாகிகள்

19 hours ago

“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை!” – 14 புதிய கழிவுநீர் வழித்தடங்கள், பக்கிள் ஓடை, உப்பாற்று ஓடை தயார்: மேயர் ஜெகன் பெரியசாமி

22 hours ago

மீளவிட்டானில் 9 நாள் போராட்டம் வெற்றி! புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படாது – மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் சப் கலெக்டர் உறுதி!

2 days ago

மகளிர் வெற்றிப்பயணம் எதிரொலி: தூத்துக்குடியில் அரசு - தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்!

4 days ago

காந்தி ஜெயந்தியில் அதிரடி சோதனை: தூத்துக்குடியில் 38 பேர் கைது – 1,495 மதுபாட்டில்கள் பறிமுதல்

5 days ago

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம்: தூத்துக்குடியில் திமுக சார்பில் மரியாதை

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement