Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி! தேசியக்கொடி, பாஜக கொடிகளுடன் திரண்ட நிர்வாகிகள்

Admin 16 hours ago தூத்துக்குடி
தூத்துக்குடி:07
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை நினைவுகூரும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் ‘சேவா ஜோதி’ பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது.

 இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் தீபத்தை ஏந்தியபடி பேரணி நடைபெற்றது.

தேசியக்கொடிகள் மற்றும் பாஜக கொடிகளும் எடுத்துச் செல்லப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்க்கைப் பயணத்தை விளக்கும் பதாகைகள் பேரணியில் இடம்பெற்றன.

பேரணியின் நோக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்க்கைப் பயணத்தை நினைவுகூருவதுடன், மக்கள் நலன் மற்றும் சமூக சேவை தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் பேரணி நடத்தப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

2047 இலக்கை முன்வைத்து
இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் பொதுமக்கள் பங்களிக்க வேண்டும் என்ற கருத்தும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது

பேரணியில் பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன், மீனவர் அணி மாநிலத் தலைவர் சீமா பாலு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள், ஏ எம் ராஜேஷ் ஆறுமுகம் செல்வராஜ் மாவட்ட துணைத் தலைவர்கள், சிவராமன் இசக்கிமுத்து காளிராஜா மாசானம் சண்முகசுந்தரம் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வீரா மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை!” – 14 புதிய கழிவுநீர் வழித்தடங்கள், பக்கிள் ஓடை, உப்பாற்று ஓடை தயார்: மேயர் ஜெகன் பெரியசாமி

19 hours ago

“போதை இல்லாத தலைமுறையை உருவாக்குவோம்” – தூத்துக்குடியில் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அழைப்பு

1 day ago

மீளவிட்டானில் 9 நாள் போராட்டம் வெற்றி! புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படாது – மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் சப் கலெக்டர் உறுதி!

2 days ago

மகளிர் வெற்றிப்பயணம் எதிரொலி: தூத்துக்குடியில் அரசு - தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்!

4 days ago

காந்தி ஜெயந்தியில் அதிரடி சோதனை: தூத்துக்குடியில் 38 பேர் கைது – 1,495 மதுபாட்டில்கள் பறிமுதல்

5 days ago

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம்: தூத்துக்குடியில் திமுக சார்பில் மரியாதை

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement