Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

மகளிர் இலவசப் பேருந்து பயணம் விரிவாக்கம்: எவ்வளவு தூரம் பயணிக்கலாம்? — முழு விவரம்!

Admin 5 days ago தூத்துக்குடி

தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத்திற்னான ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ கோயம்பேட்டில் முதல்வர் விஜய் நாளை (அக். 2) தொடங்கி வைக்கிறார்.


தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டமான 'விடியல் பயணத் திட்டம்', தற்போதைய த.வெ.க அரசால் 'வெற்றிப் பயணத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் பேருந்துகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் இலவசமாகப் பயணிக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் சாதாரண நகரப் பேருந்துகள் தவிர்த்து எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். (LSS), மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்கலாம்:

 பொதுவாக எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 30 முதல் 100 கி.மீ வரையிலும், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் 30 முதல் 40 கி.மீ வரையிலும், டீலக்ஸ் பேருந்துகள் 30 முதல் 50 கி.மீ வரையிலும் இயக்கப்படுகின்றன.

 எக்ஸ்பிரஸ் பேருந்துகள் மூலம் பெண்கள் சென்னையிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வரை அடுத்தடுத்த பேருந்துகளில் மாறி மாறி இலவசமாக நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

முக்கிய நகரப் பாதைகள்: திருச்சி – திண்டுக்கல், கோவை – சேலம், மதுரை – விருதுநகர், திருநெல்வேலி – நாகர்கோவில் போன்ற அனைத்து முக்கிய எக்ஸ்பிரஸ் தடங்களிலும் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம்.

84 லட்சம் பெண்கள் பயனடைவர்:

மாநிலம் முழுவதும் உள்ள 12,692 அரசுப் பேருந்துகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 84 லட்சம் பெண்களும் திருநங்கைகளும் பயனடைவர் என்றும், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒருவழிப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

“போதை இல்லாத தலைமுறையை உருவாக்குவோம்” – தூத்துக்குடியில் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அழைப்பு

7 hours ago

மீளவிட்டானில் 9 நாள் போராட்டம் வெற்றி! புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படாது – மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் சப் கலெக்டர் உறுதி!

1 day ago

மகளிர் வெற்றிப்பயணம் எதிரொலி: தூத்துக்குடியில் அரசு - தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்!

3 days ago

காந்தி ஜெயந்தியில் அதிரடி சோதனை: தூத்துக்குடியில் 38 பேர் கைது – 1,495 மதுபாட்டில்கள் பறிமுதல்

4 days ago

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம்: தூத்துக்குடியில் திமுக சார்பில் மரியாதை

4 days ago

தூத்துக்குடி மாநகராட்சியில் LR காப்பி வழங்குவதில் விதிமீறலா? கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய பாஜக வலியுறுத்தல்!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement