Share On
மாவட்ட செய்திகள்

அண்ணாமலை பிறந்தநாள் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி பாராட்டிய பாஜக நிர்வாகிகள்

Admin 3 weeks ago தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மண்டல் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மண்டல் சார்பில் ஏழை மற்றும் திறமையான மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவி தொகை வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


முத்தையாபுரம் தங்கமாள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பொட்டல்காடு பள்ளிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களின் முயற்சியை பாராட்டி, அவர்கள் மேலும் உயர்வுகளை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவி வழங்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் செய்திருந்தார்.

இதில் தெற்கு மண்டல் தலைவர் மாதவன், மாவட்ட துணை தலைவர் மாசானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, எதிர்கால முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய கல்வியின் அவசியம் குறித்து நிர்வாகிகள் உரையாற்றினர்.

அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வி பயணத்திற்கு முக்கிய ஊக்கமாக அமைந்தது

மேலும் செய்திகள்

அஸ்ஸாமில் பணியின்போது தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம்; கே.பி. தளவாய்புரம் கிராமத்தில் சோகம்!!

8 hours ago

14 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

2 days ago

தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது : கீதா ஜீவன் குற்றச்சாட்டு

2 weeks ago

கடம்பூர் ராஜுவின் விலகல் வெட்கக்கேடு: டாக்டர் கோசல்ராம் ராஜா கடும் விமர்சனம்!!

2 weeks ago

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்

2 weeks ago

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

2 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement