Share On
மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்

Admin 2 weeks ago தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர் கூறியதாவது:

“கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ஏமாற்றி, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதில் சிலருக்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியிருப்பதை நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சட்டவிரோத லாட்டரி விற்பனை மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று வேறு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பும் சமூக நீதியும் உறுதி செய்யப்படும் வகையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்காத பட்சத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

அஸ்ஸாமில் பணியின்போது தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம்; கே.பி. தளவாய்புரம் கிராமத்தில் சோகம்!!

6 hours ago

14 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

2 days ago

தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது : கீதா ஜீவன் குற்றச்சாட்டு

2 weeks ago

கடம்பூர் ராஜுவின் விலகல் வெட்கக்கேடு: டாக்டர் கோசல்ராம் ராஜா கடும் விமர்சனம்!!

2 weeks ago

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

2 weeks ago

அண்ணாமலை பிறந்தநாள் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி பாராட்டிய பாஜக நிர்வாகிகள்

3 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement