Share On
மாவட்ட செய்திகள்

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Admin 2 weeks ago தூத்துக்குடி
தூத்துக்குடி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றம் சார்பில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தவெகவில் இணைந்ததை கண்டித்து தூத்துக்குடி யூனியன் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சராகவும், தூத்துக்குடி  வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளராகவும் பதவி வகித்த கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்ற அவர், முதல் வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார். தேர்தல் முடிவில் அவர் தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து கடந்த 06.06.2026 அன்று தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் தலைமையில் தவெகவில் இணைந்தார். இந்த நடவடிக்கை அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தூத்துக்குடி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “பல ஆண்டுகள் கட்சியிலும் அமைச்சர் பதவியிலும் சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது கட்சியை விட்டு தவெகவில்  இணைந்துள்ளார்” எனக் கூறி கடம்பூர் ராஜூவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் கோசல்ராம் ராஜா, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவ மாடசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாக்சன் துரைமணி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் தங்கம் டி.முருகேசன், மாவட்ட இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் முத்துப்பட்டன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தங்கத்துரை, அம்மா பேரவை இணைச் செயலாளர் முத்துராமலிங்கம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வ விக்னேஷ், கூட்டாம்புளி சுப்புநாராயணன், வேல்சாமி, சேர்வலார்மடம் அந்தோணி ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

அஸ்ஸாமில் பணியின்போது தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம்; கே.பி. தளவாய்புரம் கிராமத்தில் சோகம்!!

6 hours ago

14 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

2 days ago

தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது : கீதா ஜீவன் குற்றச்சாட்டு

2 weeks ago

கடம்பூர் ராஜுவின் விலகல் வெட்கக்கேடு: டாக்டர் கோசல்ராம் ராஜா கடும் விமர்சனம்!!

2 weeks ago

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்

2 weeks ago

அண்ணாமலை பிறந்தநாள் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி பாராட்டிய பாஜக நிர்வாகிகள்

3 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement