இரும்பு இதயத்துடனும் இதயக்கனி எம்ஜிஆர் அவர்கள் காட்டிய வழியில் அம்மாவின் ஆசியுடனும் எடப்பாடியாரின் சீரிய தலைமையில் அவரது கரம் பற்றி வழி நடப்போம்.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் சேர்மனுமான டாக்டர் கோசல்ராம் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் அதிமுக தொண்டர்கள் மனவேதனையில் உள்ள நிலையில், கட்சிக்கு துரோகம் செய்து விட்டு சிலர் கட்சியை விட்டு வெளியேறுவது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கடம்பூர் ராஜு, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் வெளிவரும் என்ற அச்சத்தில் கட்சியை விட்டு விலகியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்
அதிகார பதவிகளை அனுபவித்த பிறகு இயக்கத்துக்கு துரோகம் செய்திருப்பது வெட்கக்கேடான செயல் என்றும் விமர்சித்துள்ளார்
மேலும், மாவட்டத்தில் உண்மையான தொண்டர்களை ஒதுக்கி வைத்து தனிப்பட்ட ஆதிக்கத்துடன் செயல்பட்டதால் கழக வளர்ச்சி பாதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வெளியேறியது அதிமுகவின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இயக்கத்தின் உண்மை தொண்டர்கள் அனைவரும் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டு, பீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் எழுச்சி பெறும் என டாக்டர் கோசல்ராம் ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.