Share On
மாவட்ட செய்திகள்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நள்ளிரவில் களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி: இருசக்கர வாகனத்தில் 3 மணி நேரம் தெருத்தெருவாக ஆய்வு!!

Admin 1 hour ago தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்காக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பணி செய்வது எங்களது கடமை – மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் அளித்த கோரிக்கையைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் அரசியல் பாரபட்சமின்றி தேவையான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு கோடைகால பருவமழை குறைந்ததால் வல்லநாடு ஆற்றுப்படுகையில் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் பிரச்சினை தொடர்ந்து நிலவி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை என்றும், சில இடங்களில் பாதியளவு மட்டுமே குடிநீர் வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன, இதுதொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு கே.வி.கே. நகர், மகிழ்ச்சிபுரம், பக்கிள் ஓடையை ஒட்டிய அண்ணாநகர் பகுதி மற்றும் நான்காவது ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் இருசக்கர வாகனத்தில் டார்ச் லைட்டுடன் அப்பகுதிகளில் தெருத்தெருவாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்த விவரங்களை கேட்டறிந்ததுடன், வீடுகளுக்கு நேரில் சென்று குடிநீர் வருகிறதா என்பதையும் பார்வையிட்டார்.


பின்னர் பொதுமக்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, குடிநீர் வராத தெருக்களுக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மூலம் நிரந்தரமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய குழாய் பதிக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படும் என்றும், அதன்பிறகு குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவது எங்களது கடமை. மாநகராட்சி தொடர்பான எந்த கோரிக்கையாக இருந்தாலும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம்” என்றார்.

ஆய்வின்போது பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், கவுன்சிலர்கள் கனகராஜ், சோமசுந்தரி, கந்தசாமி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

மாநகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வஉசி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உறுதி

2 hours ago

தூத்துக்குடியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

3 hours ago

"அமைச்சரை காணோம்" அதிருப்தியில் தூத்துக்குடி தொகுதி மக்கள்; அடிப்படை பிரச்சனையில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு!!

4 hours ago

தூத்துக்குடிக்கு குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது,ஆற்றுக்குள் இறங்கி ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

1 day ago

தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் !!

1 day ago

ஆதிக்க சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

2 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement